அதிசயம் ஆனால் உண்மை - பூவை விழுங்கும் பிள்ளையார் - வைரல் வீடியோ
பிள்ளையார் பால் குடித்தார் என்ற செய்தி ஒரு காலத்தில் எவ்வாறு பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோ அதே போல தான் தற்போது ஒரு பிள்ளையார் சிலைகுள் பூ செல்கிறது.
கடவுளும் நம்பிக்கைகளும்
இந்திய மக்கள் மட்டுமின்றி உலகளவில் பல மக்களும் மூடநம்பிக்கைகள் ஆட்கொள்ளப்பட்டு தான் இருக்கின்றனர். பெரும்பாலான இந்த சித்து விளையாட்டுகள் பின்நாளில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிச்சத்திற்கு வந்த பிறகும் தற்போதும் சில ஏமாற்று வேலைகள் கடவுளின் பெயரில் நடந்தேறி வருகின்றது.
இதற்கு நாம் யாரை குற்றம்சொல்வது என்பது தெரியவில்லை.நம்பும் மக்களையா..? அல்லது ஏமாற்றும் நபர்களையா..? என்றால் இருவரையுமே தான். ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன. சில நிகழ்ச்சிகள் எவ்வாறு நடக்கின்றது என்பதே தெரியாமல் நடந்து வருகின்றது. அப்படி ஒன்று தான் தற்போது வீடியோவாக வெளிவந்து இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
பூ விழுங்கும் விநாயகர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் திருச்சிற்றம்லத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு புராதன வனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த தலத்தில் விநாயகர் சிலை தனிச்சிறப்பு வாய்ந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை
— அன்பெழில் (@anbezhil12) September 27, 2023
வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில்
மிகவும் பழமையான #ஸ்ரீபுராதன_வனேஸ்வர_ஸ்வாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அம்மன்
சன்னதிக்கு வலது புறம் #பூ_விழுங்கும்_விநாயகர் என்னும் பெயருடைய விநாயகர் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் தங்கள் காரியங்கள் நிறைவேற… pic.twitter.com/jS3rFTSQLi
பெரியநாயகி அம்மன் சன்னதியில் வலதுபுறம் சிறு விநாயகர் சிலை உள்ளது.
இந்த விநாயகரே பூ விழுங்கி விநாயகர் என்றழைக்கப்படுகிறார். பக்தர்கள் தங்கள் காரியங்கள் நிறைவேற வேண்டிக்கொண்டு பூ விழுங்கும் விநாயகரின் இரு செவிகளிலும் உள்ள துவாரங்களில் பூக்களை செருகி வைப்பார்கள். அவர்கள் நினைத்து வைத்த காரியம் நிறைவேறும் என்றால் செவி துவரங்களில் செருகிய பூக்கள் உள்ளே சென்றுவிடும். காரியங்கள் நிறைவேறாது என்றால் செவிகளில் வைத்த பூக்கள் அப்படியே வைத்தவாறே இருக்கும். இது இன்றும் நடந்து வருகிறது. இந்த வீடியோ தற்போதில்லை இணையத்தளத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.