பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் : கொந்தளித்த குஷ்பு

BJP Kushboo
By Irumporai Aug 24, 2022 10:14 AM GMT
Report

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை, மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என குஷ்பு ட்வீட்செய்துள்ளார்.

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை  

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடந்த கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 பேருக்கும் மன்னிப்பு வழங்கி குஜராத் அரசு சமீபத்தில் விடுதலை செய்திருந்தது.

பில்கிஸ் பானு  குற்றவாளிகள் விடுதலை மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் : கொந்தளித்த குஷ்பு | Pilkis Banu Case Disgrace To Mankind Khushbu

தண்டனை குறைப்பு குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குற்றவாளிகள் 11 பேரையும் குஜராத் அரசு விடுவித்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், , பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை, மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என பாஜகசெயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் :

பெண்ணுக்கு நீதி கிடைத்தாக வேண்டும்

 பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உயிருக்கு பயந்த நிலையில் இருக்கும் பெண்ணுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். அத்தைகையை வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், விடுதலை செய்யப்பட கூடாது.

அப்படி விடுவிக்கப்பட்டால், அது மனித குலத்திற்கும் பெண்களுக்கும் இழைக்கப்படும் அவமானமாகும். பில்கிஸ் பானு மட்டுமல்லாமல், வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவருக்கு அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.