கொரோனா கட்டுப்பாடுகளுடன் சதுரகிரி கோவிலுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி

Corona Lockdown Tamil Nadu Sadhuragiri
By mohanelango Apr 21, 2021 08:58 AM GMT
Report

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.

தமிழகத்தின் கொரோனாவின் இரண்டாவது அலையானது வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கியுள்ள கோயில் நிர்வாகம் முழு ஊரடங்கான 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.

மேலும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை 4 மணி நேரம் மட்டுமே கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி எனவும், முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை எனவும, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.