சென்னையை புயல் தாக்கும்: பஞ்சாங்கத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள்

chennai rain tamilnewyear cyclone
By Fathima Apr 15, 2021 04:53 AM GMT
Report

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பஞ்சாங்கத்தை கோவிலின் சர்வசாதகம் சிவமணி வாசித்தார், அதில், இந்தியாவுக்கு வடகிழக்கில் உள்ள நாடுகளான தென் கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் நோய் அதிகமாக பரவும்.

தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை ஏற்றம், இறக்கமாக சரிவை சந்திக்கும், பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும், ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்கும்.

புதிய வைரஸ் வேகமாக பரவும், மூலிகை மருத்துவம் ஒன்றே இதற்கு தீர்வாகும், இதனால் எண்ணெய் வித்துக்கள், எள், கடுகு போன்றவற்றின் விலை உயரும்.

காபி, ஏலக்காய், மிளகு போன்ற மலைப்பகுதியில் விளையும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவற்றின் விளைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வியாபாரமும் இருக்கும்.

இந்தாண்டு சென்னையில் கடுமையான மழை பெய்யும், புயல் பலமாக தாக்கும், சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புகழ்பெற்ற பழைய கட்சியே ஆட்சியை பிடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.