‘விராட் கோலி போல் தரையில் விளையாடுங்க’ - கிண்டல் செய்த கெவின் பீட்டர்சன்
இங்கிலாந்து அணியின் இளம் வீரர் டாம் பென்டனுக்கு முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அறிவுரை வழங்கியுள்ளார்.
வித்தியாசமாகவும் அதிரடியாகக் விளையாடக்கூடிய திறமை பெற்ற டாம் பென்டன் இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளில், தி ஹண்ட்ரட் தொடரிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் டாம் பென்டனுக்கு அறிவுரை வழங்கிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன், ‘விராட் கோலி மாதிரி இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
எடுத்தவுடன் பவுண்டரி அடிக்க கற்றுக்கொள்ளாமல் கோலி போல் தரையில் விளையாட பென்டன் கற்றுக்கொள்ள வேண்டும் கிண்டல் கலந்து பீட்டர்சன் கூறியுள்ளார்.