இங்கிலாந்தில் எதற்கு இந்த போட்டி: கடுப்பான கெவின் பீட்டர்சன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இங்கிலாந்து நாட்டில் வைத்திருக்கக் கூடாது என்று முன்னாள் இங்கிலாந்து அணி வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி தொடங்கியது. ஐந்து நாட்கள் நடந்த இப்போட்டியில் இரண்டு நாட்கள் மழையின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்தில் வானிலை எப்போது வேண்டுமானாலும் மாற அதிக வாய்ப்பு உள்ளது. முக்கியமான போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களை இங்கிலாந்தில் வைத்து நடத்தக் கூடாது. அது போட்டியின் சுவாரசியத்தை குறைத்துவிடும் பீட்டர்சன் கூறியுள்ளார்.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்துதான் நடத்தி இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.