தல தோனி தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ (LGM) - படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது...!

MS Dhoni Tamil Cinema
By Nandhini Jan 28, 2023 07:02 AM GMT
Report

தோனி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ (LGM) படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

தல தோனி தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ (LGM)

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனம் ‘தோனி எண்டர்டெய்ன்மெண்ட்’ தனது டுவிட்டர் பக்கத்தில், படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டர் வெளியிட்டது.

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘LGM’ ‘லெட்ஸ் கெட் மேரீட்’. இப்படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழாவில் தோனி மனைவி சாக்ஷி சிங் தோனி கலந்து கொண்டார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். ‘LGM’ படத்தில் நடிகை நதியா, நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்கிறார். ரமேஷ் தமிழ்மணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாக்ஷி சிங் தோனி பேசுகையில், நான் எங்களுடைய குழுவுடன் இங்கேயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கிறோம் என்றார்.  

pictures-from-the-puja-dhoni-entertainment-lgm