''முருகனுக்கு அரோகரா'' - வடபழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலம் - ஆன்லைனில் ஒளிபரப்பு

murugantemple vadapani kumbabishekam
By Irumporai Jan 23, 2022 05:49 AM GMT
Report

சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியின்றி இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.இன்று காலை 10.30 மணி முதல் 11 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்தது.  

கடந்த 1890ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோயில் அமைத்தர் எனவும் கூறப்படுகிறது.

இந்த கோயிலில் கடந்த 2007ஆம்ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமையன்று தொடங்கின. கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டது.

நேற்றும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது , கொரோனா வைரஸ் பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல் போன்றவை மூலம் நேரலையில் ஒளிபரப்பட்டது.