என் மகளை பற்றி..கொந்தளித்த அபிஷேக் பச்சன்

By Fathima Dec 03, 2021 11:22 AM GMT
Report

சமீபத்தி்ல் பிரபல பாலிவுட் பிரபலங்கள் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியின் மகள் ஆராத்யா பச்சன் கடந்த மாதம் 10-வது பிறந்த நாளை முன்னிட்டு மாலைத்தீவுக்குக் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு தனது மகளின் பிறந்த நாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ஆராத்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

எனினும் நெட்டிசன்களில் சிலர் ஆராத்யாவைப் பற்றியும், அபிஷேக் பச்சன் குடும்பத்தைப் பற்றியும் கேலி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த அபிஷேக் பச்சன் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது, '' தன் மகளை கேலி செய்வதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். ஒரு பிரபலமாக நான் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

ஆனால், என் மகளை கேலி செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆராத்யாவை கேலி செய்பவர்கள் தைரியம் இருந்தால் என் முகத்துக்கு நேரே அதைச் செய்து பார்க்கட்டும்'' என்று அபிஷேக் பச்சன் காட்டமாக பதிலளித்துள்ளார்.