எருதுவிடும் விழாவிற்கு அனுமதி கோரி மறியல் - பேருந்து கண்ணாடிகள் உடைப்பு..!
ஒசூர் அருகே எருதுவிடும் விழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி சாலையில் ஆயிரக்கணக்கானோர் 3 மணிநேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மறியல் போராட்டத்தின் போது அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது கல் வீச்சால் பதற்றம் ஏற்பட்டது.
எருது விடும் விழாவுக்கு அனுமதி கோரி மறியல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னுமிடத்தில் இன்று எருதுவிடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டதால் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டன. முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி, போலிசார் அனைவரையும் விரட்டிய நிலையில்,
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது, போலிசார் தடுத்ததால் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர் போலீசார் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் போலீசார் வேறு வழியின்றி தடுக்க முடியாமல் திணறினர்.
பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் கற்களை குவித்து இளைஞர்கள் பொறுப்பற்ற முறையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாகனங்கள் மீது தாக்குதல்
பின்னர் இளைஞர்கள் தாங்களாகவே எருதுவிடும் விழாவை நடத்த முயன்றனர், எருதுவிடும் விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தும் கலைந்து செல்லாத இளைஞர்களால் 3 மணிநேரத்திற்கு மேலாக மறியலால் கடும் போக்குவரத்து பாதிப்பு இளைஞர்களின் பொறுப்பற்ற செயலால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சேதமடைந்தது. இதையடுத்து தற்போது போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வருகிறது.