தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு
தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி இன்று ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இதற்கு தற்காலிக சபாநாயகராக திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று ஆளுநர் முன்னிலையில் கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எம்.எல்.ஏக்களுக்கு நாளை பதவி பிரமாணம் செய்து வைப்பார் கு.பிச்சாண்டி. அதனைத் தொடர்ந்து 12-ம் தேதி சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக சார்பில் ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு சபாநாயகராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன