தமிழக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்
தமிழக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சரவையில் இடம்பெறும் 34 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்களுக்கு பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைக்கப்படும். அதற்கு தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும்.