கேரள நிலச்சரிவு : இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம் -இதை கவனிச்சீங்களா!
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ள நிலையில் இஸ்ரோ வெளியிட்ட செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிலச்சரிவு
கேரளாவில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ன 400க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தனர்.
தொடர்ந்து நான்காவது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை 298 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரோ
100க்கும் அதிகமானோரை தேடும் பணி தொடர்வதால், பலி எண்ணிக்கை 300-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடங்கி ராணுவம் வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சசூழலில் மீண்டும் கேரளாவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது.
இந்த நிலையில் கேரளா நிலச்சரி வுக்கு முன்பு மற்றும் நிலச்சரிவுக்கு பின் இருக்கும் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டள்ளது.