இனிமேல் இன்ஸ்டாகிராம்ல போட்டோ போட முடியாதா? - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட இன்ஸ்டா தலைவர்

future instagram
By Irumporai Jul 02, 2021 10:06 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

வரும்காலங்களில்  இன்ஸ்டாகிராம் தளத்தில்  புகைப்படங்கள் பதிவிட முடியாது என அதன் தலைவர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு சமூக வலைதளங்கள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன.

அவற்றில் தற்போது முக்கியமான ஒன்று இன்ஸ்டாகிராம். உலகம் முழுவதும் பல திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள நிலையில் அவர்களது ரசிகர்களும் அவர்களை அதில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

மேலும் பிரபலங்கள் தங்கள் புதிய போட்டோஷூட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

சொல்லப்போனால் திரைப்பிரபலங்களின் போட்டோஷூட்டிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது

இந்நிலையில் புகைப்படங்களுக்காகவே பிரபலமான இன்ஸ்டாகிராமில் வருங்காலத்தில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என அதன் தலைவர் ஆடம் மொசாரி தெரிவித்துள்ளார்.

டிக்டாக், யுட்யூப் ஷாட்ஸ் போல இன்ஸ்டாகிராமையும் வீடியோ தளமாக மாற்ற திட்டமிட்டுள்ளதால் எதிர்காலத்தில் புகைப்படம் பதியும் தளமாக இன்ஸ்டாகிராம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

ஆடமின் இந்த அறிவிப்பு இன்ஸ்டகிராம் பயனர்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.