‘அந்த நாள் நியாபகம் வந்ததே நண்பனே’-பழைய நினைவுகளில் மூழ்கிய உதயநிதி

udhayanidhi stalin egmoredonboscoschool
By Petchi Avudaiappan Sep 01, 2021 06:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 தான் படித்த டான்பாஸ்கோ பள்ளிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் பழைய நினைவுகளில் மூழ்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கொரோனாவால் ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகம் பொங்க ஆசிரியர்களையும், நண்பர்களையும் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனிடையே எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த பள்ளியில் தான் உதயநிதி ஸ்டாலின் படித்தார்.

அங்கு தான் பாடம் பயின்ற அதே வகுப்பறையில் மாணவர்களுடன் உதயநிதி கலந்துரையாடினார். இதன் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்ட உதயநிதி, ‘பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தோம்.

நான் அன்று பாடம் பயின்ற அதே வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தன. என் ஆசிரியர்களுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.