தனுஷ்கோடியில் பால்வெளி அண்டம் - தமிழக சுற்றுலாத்துறை எடுத்த அழகிய புகைப்படங்கள்!
பால்வெளி அண்டத்தின் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளது தமிழக சுற்றுலாத்துறை.
பால்வெளி அண்டம்
இரவு வானில் நட்சத்திரங்களின் குவியல்கள் மற்றும் ஒளிச் சிதறல்களாக காணப்படுவது, வெகு தொலைவில் உள்ள வெவ்வேறு சூரிய குடும்பங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றை வானியல் ஆய்வாளர்கள் பால்வெளி அண்டம் என்று குறிப்பிடுகின்றனர்.
ஒளி மாசு இல்லாத இடங்களில் இருந்து, வானில் தோன்றும் நட்சத்திரங்களின் குவியல்களையம், இளிச்சிதறல்களையும் நம்மால் பார்க்க முடியும். ஆனால் தற்போது உலகில் விளக்குகளால் ஏற்படும் ஒளி மாசு அதிகப்படியாக அதிகரித்துள்ளது. இதனால் வெறும் கண்களால் நட்சத்திரங்களை நம்மால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் சில குறிப்பிட்ட இடங்களில் இது குறைவாக இருக்கிறது. இந்த இடத்திலிருந்து வானத்தை பார்த்தால் 5 கோள்கள் வரை நம்மால் தெளிவாக பார்க்க முடியும். அதேபோல நமது பால்வெளி அண்டத்தின் ஒரு பகுதியும் தெளிவாக தெரியும்.
தமிழக சுற்றலாத்துறை
அந்தவகையில் தமிழ்நாடு, ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடியின் அரிச்சல் முனையில், அண்மையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது.
வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும் சந்திக்கும் அரிச்சல் முனை பகுதியில் சில கட்டிடங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட பால்வெளியின் தோற்றத்தை புகைப்படங்களாக தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது. அதில் பால்வெளி அண்டத்தின் ஒரு பகுதி அற்புதமாக தெரிந்துள்ளது.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஆழ் விண்வெளியை ரசிக்க விரும்புவோர் இதுபோன்ற ஒளி மாசு குறைவான இடங்களுக்கு செல்லலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.