இன்ஸ்டாவில் மீண்டும் டிரம்ப் : விதிக்கப்பட்ட தடை நீக்கம்
Donald Trump
Instagram
By Irumporai
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கான தடை நீக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
டிரம்ப் இன்ஸ்டா முடக்கம்
வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது.

டிரம்பு தடை
இதனிடையே, கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கியவுடன், டிரம்புக்கான தடையை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் டிரம்புக்கான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் டிரம்ப்பை பின் தொடரும் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.