பெண் உறுப்புகளை மட்டும் போட்டோ எடுக்கும் பெண் புகைப்படக்கலைஞர் - என்ன காரணம் தெரியுமா?
அழகு குறித்து தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண் புகைப்படக்கலைஞர் ஒருவர் செய்யும் சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் சன்சைன் கோஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் எல்லி என்ற பெண் புகைப்படக்கலைஞராக உள்ளார். இவர் ஆண் நண்பர் ஒருவருடன் உறவில் இருந்தபோது அந்த நபர் எல்லியின் பெண் உறுப்பு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் தாழ்வு மனப்பான்மையில் சிக்கிய அவர் தன் பெண்ணுறுப்பின் வெளிபாகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு சம்பந்தப்பட்ட மருத்துவமனையை அணுகியுள்ளார்.
அப்போது அங்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் எல்லியை அழைத்து பெண்ணுறுப்பு குறித்தும், மற்ற உடல் அங்கங்கள் மனிதர்களுக்கு மாறுபட்டு இருக்கும் எனவும் விளக்கியுள்ளார். மேலும் கடவுள் படைப்பில் அனைவரும் அழகு தான் என்பதை விளக்க எல்லி தன்னைப் போல் உடலழகு குறித்து தாழ்வு மனப்பான்மையில் சிக்கியுள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து அவர் பெண்களின் உடல் அங்கங்களை புகைப்படம் எடுத்து பெண்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதனைப் பார்த்த பலரும் எல்லியின் செயலை பாராட்டி வருகின்றனர்.