வீடியோவை பதிவு செய்த செய்தியாளர் சுட்டுக்கொலை? பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த வீடியோ எடுத்த செய்தியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கீம்பூர் மாவட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனி சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார்.
அவருடன் துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவும் அங்கு வர இருந்தார்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதனால் துணை முதல்வரின் நிகழ்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், கோபமடைந்தவர்கள் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது காரை விட்டு மோதினர்.
இதில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த வீடியோ காட்சிகள் வைரலாக கடும் கண்டனங்கள் எழுந்தது.
இந்நிலையில் இதனை பதிவு செய்த செய்தியாளர் ராமு காஷ்யப் என்பவரை சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் விசாரணை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது