Viral Photo : கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் தோன்றிய மனித முகம்... - வியந்த மக்கள்...!

Viral Photos England
By Nandhini Mar 03, 2023 08:17 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் தோன்றிய மனித முகத்தின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடல் அலையில் தோன்றிய மனித முகம்

சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட் (41) புகைப்படக் கலைஞர் சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தின் சதர்லாந்து பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு இயற்கை காட்சிகளை புகைப்படமாக எடுத்துக் கொண்டிருந்தார். மொத்தம் 4000 புகைப்படங்களை எடுத்தார். தான் எடுத்த புகைப்படங்களை பார்த்தபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

இயன் எடுத்த புகைப்படங்களில் ஒன்று கடல் அலை கலங்கரை விளக்கத்தில் மோதி அது மனித முகம் போன்ற உருவத்தில் பொங்கி எழுந்திப்பதை கண்டு இயன் பார்த்து பிரம்மித்தார்.

இந்நிலையில், இந்த புகைப்படத்தை இயன் தன்னுடைய சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

photographer-captures-face-in-a-wave