கீழே விழப் பார்த்த புகைப்படக் கலைஞரை தூக்கிவிட்ட நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ
தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்த வந்துக்கொண்டிருந்தார். அப்போது நடிகர் விஜய் விஜய் வருவதைப் பார்த்து மக்களும், பத்திரிகையாளர்களும் அந்த இடத்தில் சூழ்ந்தனர்.
அப்போது நடிகர் விஜய் நடந்து வந்துக்கொண்டிருந்த போது ஒரு புகைப்படக் கலைஞர் தட்டுத் தடுமாறி கீழே விழப் பார்த்தார். அப்போது சட்டென்று நடிகர் விஜய் அவரை கீழே விழாமல் அவரை பிடித்து நிற்க வைத்தார்.
தற்போது இது குறித்த விடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.