ஈஷா யோகா மையத்தில் புகைப்படம் எடுத்த ஷாரிக் - கால்டாக்சி டிரைவர் பரபரப்பு தகவல்
மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டை வெடிக்க வைத்து பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஷாரிக் கோவை ஈஷா யோகா மையத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்டோவில் குக்கர் குண்டு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததாக செய்திகள் வெளியானது. இது பற்றி கர்நாடக மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆட்டோவில் குக்கர் குண்டு கொண்டு செல்லப்பட்டு வெடிக்க வைத்ததாகவும் தகவல் வெளியானது.
ஆட்டோவில் சென்ற ஷாரிக் என்பவர் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்த ஷாரிக் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்தநிலையில் ஷாரிக் ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை புகைப்படம் எடுத்ததை நேரில் பார்த்ததாக கோவையைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போலீசார் தீவிர விசாரணை
இதையடுத்து போலீசார் கால்டாக்சி டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதில உங்களுக்கு எப்படி அவரை தெரியும்? அங்கு புகைப்படம் மட்டும் தான் எடுத்தாரா? என பல கோணங்களில் விசாரிக்க தொடங்கினர்.
இதற்கு பதில் அளித்த அவர், தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் ஷாரிக் போட்டோ வெளியானதை பார்த்தேன். அப்போது தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.