அந்தரங்க போட்டோ வெளியீடு? - கதறி அழுத பிரபல நடிகை

Tamil Cinema Hyderabad
By Thahir 2 மாதங்கள் முன்

மாஃபிங் செய்யப்பட்ட அந்தரங்க போட்டோ வெளியான நிலையில் பிரபல நடிகை கண்ணீர் மல்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்ணீர் மல்க வேண்டுகோள் 

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனக்கு செப்டம்பர் 11 ஆம் தேதி ஒரு எஸ்எம்எஸ் வந்தது அதில் உங்களுக்கு 5 லட்சம் பரிசு பெற்றுள்ளதாக வந்ததாகவும், அந்த லிங்கை க்ளிக் செய்தவுடன் ஒரு ஆப் தானாக டவுன்லோட் ஆனதாக தெரிவித்தார்.

அந்தரங்க போட்டோ வெளியீடு? - கதறி அழுத பிரபல நடிகை | Photo Release The Famous Actress Who Cried

டவுன்லோடு ஆன உடன் என்னுடைய மொபைல் ஹேங்க் ஆனது. பின்னர் 4 நாட்கள் கழித்து ஒரு போன் கால் வந்தது . அதில் நீங்கள் லோன் வாங்கியிருப்பதாகவும்,

அந்த லோனை கட்டுங்கள் எனக் கூறி தொடர்ந்து மெசேஜ், மற்றும் கால்கள் வந்தது.இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் என்னுடைய வாட்ஸ் அப்பில் உள்ள எல்லோருக்கும் எனது மாஃபிங் செய்யப்பட்ட போட்டோ போயிருக்கு எனது பெற்றோர், நண்பர்களுக்கு எனக் கூறி அழுதார்.

மேலும் இது மாதிரி பரிசு பணம் விழுந்துள்ளது என மெசேஜ் வந்தால் டவுன்லோடு பண்ணாதீங்க என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.