ஒலிம்பிக் தொடக்க விழா; அமைச்சரை முத்தமிட்ட பிரான்ஸ் அதிபர் - வைரலாகும் புகைப்படம்!
தொடக்க விழாவில் பிரான்ஸ் அதிபர் அமைச்சரை முத்தமிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
முத்தமிட்ட அதிபர்
பிரான்ஸின் தலைநகரமான பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 160 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது.
வைரல் புகைப்படம்
இந்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு அமைச்சர் அமெலி ஓடியா-காஸ்டெராவை முத்தமிட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.
அமெலி ஓடியா-காஸ்டெரா பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கழுத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிடுவது போல் புகைப்படம் அமைந்திருக்கிறது. எக்ஸ் தளத்தில் வெளியான இந்த புகைப்படங்கள் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் “இது அநாகரீகமானது” என கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இந்த புகைப்படத்திற்கு மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரான் எவ்வாறு பதிலளிப்பார் என்று கற்பனை செய்து மீம்ஸ்களை உருவாக்கினர்.