தொடரும் பொருளாதார நெருக்கடி நிலை : 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிலிப்ஸ்

By Irumporai Jan 30, 2023 10:14 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக பிரபல டெக் நிறுவங்களான கூகுள்,பேஸ்புக் போன்றவை நிதி நிலையினை காரணம் காட்டி பல பணியாளர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

லாபத்தை அதிகரிக்க

லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் பிலிப்ஸ் நிறுவனம் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அந்நிறுவன ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 5% ஆகும்.

தொடரும் பொருளாதார நெருக்கடி நிலை : 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிலிப்ஸ் | Philips To Lay Off 6000 Employees

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 6,000 பணிகளை அகற்றுவதாக அறிவித்துள்ளது பிலிப்ஸ் நிறுவனம். டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ், அதன் லாபத்தை அதாவது பொருளாதாரத்தை மீட்டெடுக்க 6,000 ஊழியகளை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. 

தொடரும் நெருக்கடி நிலை

அந்த நிறுவனம் சந்தை மதிப்பில் 70% வீழ்ச்சியடைந்த சுவாச சாதனங்களை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த 6,000 பணிகளில் பாதி வேலைகள் இந்த ஆண்டு குறைக்கப்படும், மற்ற பாதி 2025 க்குள் குறைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் என்று தெரிவித்துள்ளது.

புதிய மறுசீரமைப்பு கடந்த அக்டோபரில் அதன் பணியாளர்களை 5% அல்லது 4,000 வேலைகளைக் குறைப்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் வருவதாகவும் கூறப்படுகிறது.