இப்படி ஒரு கணவரா...? - நெகிழ்ச்சி அளிக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரல்
Philippines
Viral Photos
By Nandhini
நெகிழ்ச்சி புகைப்படம் வைரல்
பிலிப்பைன்ஸ் நாட்டில் கணவனும், மனைவியும் சேர்ந்து சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், பணிச்சுமை காரணமாக மனைவிக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
இதனையடுத்து, கணவர் மனைவியின் படத்தை தலையணையில் அச்சிட்டு சுற்றுலாவிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
சுற்றுலா சென்ற இடத்திலெல்லாம் தன் மனைவியின் புகைப்பட தலையணையோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களையெல்லாம் தன் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் கவனம் பெற்று வைரலாகி வருகிறது.

