ஒன்னு தடுப்பூசி போடு இல்ல இந்தியாவுக்கு ஓடு.. யார் சொன்னது தெரியுமா?
Rodrigo Duterte
vaccine-
By Irumporai
உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கொரோனா தொற்றின் 2-வது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.
இந்த நிலையில் நாட்டு மக்களிடையே தொலைபேசி வாயிலாக உரையாற்றிய பிலிப்பைன்ஸ் அதிபர் ராட்ரிகோ டூடெரெட் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராதவர்கல் கைது செய்யப்படுவார்கள் என கூறினார்.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இங்கு இருக்கக்கூடாது அவர்கள், இந்தியாவுக்கோ, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ சென்றுவிடுங்கள் எனக் கூறியுள்ளார். .