கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் சிறை தண்டனை
Covid vaccine
Philippines President Rodrigo Duterte
By Petchi Avudaiappan
பிலிப்பைன்சில் கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் துயரை ஏற்படுத்திய கொரோனா வைரசுக்கு தடுப்பூசி தான் தற்காலிகத் தீர்வு என்ற நிலையால் உலக நாடுகள் அனைத்தும் தங்களது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாகியுள்ளது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால் பிலிப்பைன்சை விட்டு வெளியேறுங்கள். இந்தியா அல்லது அமெரிக்கா எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்றும் அதிபர் ரோட்ரிகோ துதர்தே கூறினார்.