பிலிப்பைன்சை புரட்டி போட்ட 'நால்கே' புயல் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்தது...!

Viral Video Philippines
By Nandhini Oct 31, 2022 07:14 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பிலிப்பைன்சை தாக்கிய 'நால்கே' புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது.

பிலிம்பைன்சை தாக்கிய ‘நால்கே புயல்’

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் சமீபத்தில் ‘நால்கே புயல்’ தாக்கியது. இதனால், கடந்த 5 நாட்களாக சூறாவளி காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையால் வீடுகளை இழந்து, உணவின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். வீடுகளில் புகுந்த மழை நீரால் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை.

தலைநகர் மணிலா உள்ளிட்ட பல நகரங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டது.

philippines-flood-storm-nalgae-viral-video

பலி எண்ணிக்கைக் 100 ஆக உயர்ந்தது

இந்நிலையில், பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக அழிவுகரமான புயலால் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கிராம மக்கள் தவறான திசையில் ஓடியதால் மற்றும் பாறாங்கற்கள் நிறைந்த சேற்றில் புதைக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்றும், பல மாகாணங்களில் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.