குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - கட்டிப்பிடித்த படி உயிரைவிட்ட குழந்தைகள்!
பெரும் தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து
பிலிப்பைன்ஸ், ரிசல் மாகாணம் டெய்டே நகரில் நெரிசலான இடத்தில் டஜன் கணக்கான வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. இரவில் குடியிருப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அதில் அங்குள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவியது.

இந்த விபத்தில் ஒரே சமயத்தில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
7 பேர் பலி
இருப்பினும், விபத்தில் சிக்கி 2 வயது பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தீ விபத்தால் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து, தங்குவதற்கு இடமின்றி தவித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் கட்டிப்பிடித்தபடி உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.