இந்திய பயணிகளுக்கு தடை - பிலிப்பைன்ஸ் அரசு அதிரடி அறிவிப்பு

1 month ago

 கொரோனா பரவல் காரணமாக 7 நாடுகளின் பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை விதிக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடைவிதித்தன.அதில் பிலிப்பைன்ஸூம் ஒன்று.

இதனிடையே கொரோனா தொற்று சூழல் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நாடுகளுக்கு கடந்த 14 நாள்களுக்குள்ளாக பயணம் மேற்கொண்ட இதர நாட்டு பயணிகளும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்