இலங்கை அணியுடன் போராடி..பிலிப் சால்ட் 36 பந்துகளில் அரைசதம்
இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டி பல்லேகேலவில் நடந்து வருகிறது.

டாஸில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்கம் முதலே இலங்கையின் பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர்.

அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் 14 பந்துகளில் 7 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, பெத்தெல் 3 ரன்னிலும், பான்டன் 6 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.
எனினும் தொடக்க வீரரான பிலிப் சால்ட் (Philip Salt) 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். மொத்தம் 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸ், 6 பவுண்டரிகளுடன் 62 ரன் விளாசினார்.
