பிஎப்7 புதிய வகை கொரோனா தொற்று - பீதியை கிளப்பும் தகவல்கள்.. அரசு தீவிர ஆலோசனை
குஜராத்தில் இரு நோயாளிகளுக்கு ஒமைக்ரான் பிஎப்7 பாதித்திருந்த நிலையில் தற்பொழுது அவர்கள் முழுமையாக குணமடைந்ததாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
பெரிய பாதிப்பை சந்திக்க வாய்ப்பில்லை
இந்தியாவில் தற்போது இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில் சீனாவை போன்று இந்தியாவின் நிலைமை மாற வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இது குறித்து நிபுணர்கள் கூறும் கருத்து, “பிஏ.5 இன் துணை வரிசையே பிஎப்.7, இந்தியாவில் தொற்று நோயின் இரண்டாவது அலையை உண்டாக்கிய டெல்டா வைரஸ் இன்னும் உள்ளது.
பிஎப்.7 வலுவான தொற்று திறன் கொண்டதாக நம்பப்படுகிறது ஒமைக்ரான் பிஎப்7 பாதிக்கப்பட்ட ஒரு நபர் 10 முதல் 18 நபர்களுக்கு பரப்ப வாய்ப்புள்ளது” என தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.