தொழிலாளர்களுக்கான பி.எஃப் (PF) வட்டி விகிதம் அதிகரிப்பு - எவ்வளவு தெரியுமா?
பி.எஃப் வட்டி விகிதம் 8.1%ல் இருந்து 8.15% ஆக அதிகரிக்கப்படுவதாக தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
பி.எஃப் வட்டி விகிதம் அதிகரிப்பு
டெல்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருங்காலத்தில் உதவியாக இருக்கும் வகையில் வருங்கால வைப்பு நிதி பி.எஃப் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 8.1%ல் இருந்த வட்டி விகிதத்தை 8.15% உயர்த்தப்படுவதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
பி.எஃப் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால் நாட்டில் 7 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஃப் வட்டி உயர்வால் நாடு முழுவதும் சுமார் 7 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்.