தமிழ்நாட்டில் கடைகள் அடைப்பு? பொதுமக்கள் அதிர்ச்சி!
பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகா் சங்க மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, “தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
அதன் அடிப்படையில் இன்னும் இரண்டு நாள்களில் அரசுத் துறை அதிகாரிகளுடன் சோ்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உறுதிமொழி ஏற்க இருக்கிறாா்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், பெட்ரோல், டீசல் விலை உயா்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து, விரைவில் ஆட்சிமன்ற கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும், எரிபொருள்களின் விலை குறையவில்லை என்றால், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இவரது பேட்டியை தொடர்ந்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.