Thursday, Jul 10, 2025

சாத்தான் குளம் அருகே பெட்ரோல் பங்கில் லாரி டிரைவர் ரத்தம் சொட்ட சொட்ட கொடூரக் கொலை - அதிர்ச்சி சம்பவம்

Murder கொலை Petrol Punk Truck driver 4-people-arrest சாத்தான் குளம் அருகே பெட்ரோல் பங்கில் லாரி டிரைவர்
By Nandhini 3 years ago
Report

நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு பணகுடி ஊருக்கும் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கிற்கு, பெட்ரோல் போடுவதற்காக தனது பைக்கை எடுத்து வந்துள்ளார்.

அப்போது, அந்த இடத்தில் 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் தகராறு செய்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த கலைச்செல்வன் அவர்களிடம் ஏன் இப்படி தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது, அந்த கும்பலுக்கும், கலைச்செல்வனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. பிறகு கைகலப்பாக மாறியது. ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கலைக்செல்வனை பயங்கரமாக தாக்கியது. இந்தத் தாக்குதலில் அவர் ரத்தக் காயத்துடன் மயங்கி கீழே விழுந்தார்.

இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. கலைச்செல்வனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கலைச்செல்வனை கொலை செய்த பணகுடி கோரி காலனியை சேர்ந்த கொலையாளிகள் மணீஷ் ராஜா, ஆட்டோ குமார், பாலசுப்பரமணியன், சிவா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மாணிக்கராஜா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.