‘’ இதுக்கு ஒரு எண்டே இல்லையா ‘’ : மீண்டும் எகிறும் பெட்ரோல், டீசல் விலை , சோகத்தில் சாமானியர்கள் !
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டுவந்தது. பெட்ரோல் விலை 110 ரூபாய் வரை தொட்ட நிலையில், டீசல் 100 ரூபாயை தொட்டது . இதனால் பொது மக்கள் வாகனங்களை இயக்கவே பெரிதும் சிரமப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்தது. இதன் மூலம் கடந்த 136 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் உயர்த்தப்படவில்லை. குறிப்பாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
ஆகவே கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி முதல் 137 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81க்கும் , டீசல் ரூ.91.88க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ,இந்நிலையில் தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பின் பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.102.16-க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.92.19-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது தமிழ்நாட்டில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹50 அதிகரித்து, ₹967-க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்ததால் சாமானிய மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.