தமிழகத்தில் ரூ.100ஐ கடந்தது பெட்ரோல் விலை
சென்னையை தவிர 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையாகிறது.தமிழ்நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், சிவகங்கை, அரியலூர், திண்டுக்கல், சேலம், தருமபுரி, தஞ்சாவூர் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் விலை 101 ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 30 காசுகள் அதிகரித்து 99 ரூபாய் 49 பைசாவாக உள்ளது.
இதேபோல் டீசல் விலையும் பெட்ரோல் விலைக்கு டஃப் கொடுக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து 93 ரூபாய் 46 பைசாவாக விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
