பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்ந்தது - கடும் அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உக்ரைன் போர் எதிரொலியாக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 130 டாலாக உயர்ந்துள்ளது.
இதனால், இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் கடுமையாக உயர்த்தியுள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் 75 ரூபாக்கும், பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 50 ரூபாக்கும் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, தற்போது இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 254 ரூபாக்கும், டீசல் விலை 176 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இலங்கையில் அதிக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயந்துள்ளது இதுவே முதல்முறையாகும். உக்ரைன் போர் எதிரொலியாக சென்னையிலும் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளது.
