பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
Petrol diesel price
By Fathima
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் போரின் விளைவாக ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளது, இதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில் 4வது முறையாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோலுக்கு 2 ரூபாய் 46 காசு வீதம் தற்போதைய நிலவரப்படி 107 ரூபாய்க்கும், டீசல் விலை 2 ரூபாய் 57 காசு வீதம் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.