பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Petrol diesel price
By Fathima May 15, 2026 12:13 PM GMT
Report

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோலின் விலை 103 ரூபாய்க்கும், டீசல் 95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் எரிவாயு தட்டுப்பாட்டே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.