20 வருஷமா மனித குலத்திற்கு இருந்த ஆபத்து முடிவுக்கு வந்திருச்சு : ஐ.நா. நிம்மதி பெரு மூச்சு
மனித குலத்திற்கு கேடு விளைவிக்கும் ஈயம் கலந்த பெட்ரோலின் சகாப்தம் முடிந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் சுற்றுசூழல் அமைப்பு அறிவித்துள்ளது.
1928ம் ஆண்டு முதல் பெட்ரோலில் ஈயம் கலந்து விற்பனை செய்யப்பட்டது.இது சுற்றுசூழலுக்கு பேரழிவு என்று கூறிய ஐ.நா.நிபுணர்கள், ஈயம் கலந்த பெட்ரோலை பயன்படுத்ததை தவிர்க்க வலியுறுத்தினர்.
1970களில் உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்த ஈயம் கலந்த பெட்ரோல்மனித இனத்திற்கே ஆபத்தானது என்று உறுதியானதால் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் ஈயம் கலந்த பெட்ரோலுக்கு தடைவிதிக்க தொடங்கினர்.
2000ம் ஆண்டு 86 நாடுகளில் ஈயம் கலந்த பெட்ரோல் பயன்பாட்டில் இருந்ததை உறுதி செய்த ஐ.நா.சுற்றுசூழல் அமைப்பு, இதற்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுத்தது.

இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களின் பலனாக ஈயம் கலந்த பெட்ரோலை பயன்படுத்தி வந்த கடைசி நாடான அல்ஜீரியாவும் இறுதியாக தற்போது விற்பனையை நிறுத்தியுள்ளது.
இதனால் ஈயம் கலந்த பெட்ரோலின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதால் ஆண்டிற்கு 12 லட்சம் உயிரிழப்புகள் குறையும் என்று ஐ.நா. நம்பிக்கை தெரிவித்துள்ளது.