திருப்பதியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
Petrol diesel price
By Fathima
திருப்பதியில் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சொந்த வாகனங்களில் கோவிலுக்கு வந்தவர்கள் அவதிக்குள்ளாகினர்.
விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதாக பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சில பெட்ரோல் நிலையங்களில் ”இருப்பு இல்லை” என்ற பலகைகளும் வைக்கப்பட்டிருந்தது.
இதனால் சொந்த வாகனங்களில் வந்தவர்கள் திருப்பதி மலையிலேயே தங்க வேண்டியிருந்தது, இதனால் கோவிலுக்கு வரும் நபர்கள் எச்சரிக்கையுடன் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
