முதலில் கலால் வரியை குறையுங்கள் : பிரதமருக்கு பிடிஆர் பதிலடி

Prime minister Narendra Modi
By Irumporai Apr 28, 2022 03:50 AM GMT
Report

இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, பேசிய பிரதமர் மோடி , கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று,தமிழகம் தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

மேலும்,தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைத்து மக்களை சிரமத்திலிருந்து மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில்,பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,மத்தியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து கடந்த 8 ஆண்டுகளாக பெட்ரோல்,டீசல் மீது விதிக்கப்படும் மத்திய,மாநில அரசுகளின் வரி விகிதங்களை பட்டியலிட்டுள்ளார்.

அந்த வகையில்,கடந்த 2014 ஆம் ஆண்டின்போது பெட்ரோல் மீது ரூ.9.48 , டீசல் மீது ரூ.3.57 மட்டுமே கலால் வரியாக மத்திய அரசு வசூலித்து வந்ததென குறிப்பிட்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர்,கடந்த 8 ஆண்டுகளில் கலால் வரியானது பெட்ரோல் மீது சுமார் 200% அளவுக்கும்,டீசல் மீதான கலால் வரி 500% அளவுக்கும் மத்திய அரசால் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,தற்போது பெட்ரோல்,டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரி விகிதத்தை கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறைக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.