என்னது மறுபடியுமா ? - பெட்ரோல் ,டீசல் விலை மீண்டும் உயர்வு

hike petroldiesel peoplesuffer
By Irumporai Mar 27, 2022 03:47 AM GMT
Report

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.104.90-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 53 காசுகள் உயர்ந்து ரூ.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையில் ரூ.3.50 ஆகவும் , டீசல் விலையில் ரூ.3.57 ஆகவும் அதிகரித்துள்ளது. இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவிலேயே அதிகப்படியான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நகரமாக மும்பை உள்ளது.53 காசுகள் அதிகரித்து ₹113.88 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  

தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவருவதால் சமானியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் மற்ற பொருட்களின் விலை உயரலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.