பெட்ரோல் டீசல் விலை உயர்வு - எதிர்கட்சிகள் செய்த அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு!
india
party
petrol
diesel
By Jon
மக்களவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் தொடர்பான விவாதம் மாநிலங்களவையில் நடந்து வருகிறது.
மாநிலங்களவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அதனால், எதிர்கட்சியாளர்கள் அமளியில் ஈடுபடுபட்டனர். இதனால் கூட்டத்தொடர் தொடர்வதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.