வரலாறு காணாத அளவு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை
தொடர்ந்து ஐந்தாவது நாளாக விலை ஏற்றப்பட்ட நிலையில், வரலாறு காணாத அளவில் இன்று உயர்ந்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற அரசு சார்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாய்க்கு நிகரான டொலர் மதிப்பு விகிதங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு தினசரி எரிபொருள் கட்டணத்தை திருத்துகின்றன.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, 103.84க்கு விற்கப்படுகிறது.
டீசல் விலை 35 காசுகள் உயர்த்தப்பட்டு, 90.47 ரூபாய்க்கு விற்கப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் கிட்டத்தட்ட 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 29 பைசா உயர்த்தப்பட்ட பிறகு, 109.83 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் 100.29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது,