பெட்ரோலுக்கு மட்டும் ரூ 3 விலை குறைப்பு செய்த திமுகவின் விடியா அரசே - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

Price EPS AIADMK Petrol Diesel
By Thahir Nov 04, 2021 09:28 AM GMT
Report

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்தே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது.

கொரோனா காரணமாக தொழில்துறை சரிவை சந்தித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உச்சத்தை அடைந்து வந்தன.

தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இருப்பினும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

தீபாவளியையொட்டி பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5-ம், டீசல் மீதான வரியில் ரூ.10-ம் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இதன் காரணமாக சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 5.26 குறைந்து ரூ.101.40 க்கு விற்பனையாகிறது.

டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.16 குறைந்து ரூ.91.43 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி,

"மக்கள் நலனுக்காக மத்திய அரசு தன் கலால் வரியை பெட்ரோலுக்கு ரூ 5 மற்றும் டீசலுக்கு ரூ10 விலை குறைப்பு செய்துள்ளதற்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்,

பெட்ரோல் / டீசல் விலை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு, பெயரளவில் பெட்ரோலுக்கு மட்டும் ரூ 3 விலை குறைப்பு செய்த திமுகவின் விடியா அரசே!

தங்களின் தேர்தல் வாக்குறுதியில் இன்னும் மீதமுள்ள பெட்ரோலுக்கு ரூ 2 மற்றும் டீசலுக்கு ரூ 4 விலை குறைப்பை முழுமையாக நிறைவேற்றுவது எப்பொழுது ?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.