’’பெட்ரோல், டீசல் விலை உயர காரணமே முன்பு இருந்தஅரசுகள் தான் ”- பிரதமர் மோடி
பெட்ரோல் டீசல் உயர்வுக்கு முன்னர் இருந்த அரசுகள் தான் காரனம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு எண்ணெய் எரிவாயுத் திட்டங்களுக்கு புதன்கிழமை காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நிறைவேறிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி பெட்ரோல் டீசல் என எரிப்பொருட்களின் உயர்வுக்கு முன்னர் இருந்த அரசுகள்காரனம் என கூறினார். மேலும் எரிபொருள் தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்காததுதான், சாமானிய மக்கள் இன்று மிகவும் சிரமப்படுவதற்கு காரணம் எனவும் கூறினார்.
தற்போது இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு அயல் நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய பிரதமர் மோடி.
இந்தியா தற்போது தனது எரிசக்தி தேவையில் 85 சதவீதத்தை மட்டுமே வெளிநாடுகளில் இருந்து பெறுவதாகவும். இதனை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் என கூறினார்.