ஆஹா பிரமாதம்: செல்போனில் பதிவு செய்தால் இருப்பிடம் தேடி வரும் பெட்ரோல், டீசல்

Chennai Petrol Diesel
By Thahir Aug 12, 2021 05:15 AM GMT
Report

தொலைபேசி மூலம் பதிவு செய்தால், இருப்பிடம் தேடி சென்று பெட்ரோல் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, அம்பத்தூருக்கு அருகே உள்ள கள்ளிகுப்பம் பெட்ரோல் நிலையத்தில், தொலைபேசி மூலம் பதிவு செய்தால், இருப்பிடம் தேடி சென்று பெட்ரோல் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் தேவைப்படும் நிறுவனங்கள் மற்றும் பாதி வழியில் நிற்கும் வாகன ஓட்டிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெட்ரோல் நிலையத்தில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் உள்ளவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் பெட்ரோல் விநியோகம் செய்யப்படும் என்றும், இதற்காக தங்களின் இருப்பிடம், பெயர், முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்தால் பாதுகாப்பான கேன்கள் மூலம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.